விடுவிக்கப்பட்ட முன்னாள் அரசியல் கைதி விசாரணைக்கு அழைப்பு!

Date:

வவுனியாவில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதி ஒருவரை பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு வருமாறு பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் (ரி.ஐ.டி) இன்று (06) அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா, தோணிக்கல் பகுதியில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதியான செல்வநாயகம் ஆனந்தவர்மன் என்பவரையே எதிர்வரும் 10 ஆம் திகதி வவுனியாவில் அமைந்துள்ள பயங்கரவாத விசாரணை மற்றும் தடுப்பு பிரிவுக்கு சமூகமளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்பாணையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பயங்கரவாத விசாரணை மற்றும் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்கு அமைவாக வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காக, விசாரணையை மேற்கொள்வதற்கு 2021 ஆம் ஆண்டு 8 ஆம் மாதம் 10 ஆம் திகதி காலை 10 மணிக்கு பயங்கரவாத விசாரணை மற்றும் தடுப்பு பிரிவு வவுனியா கிளைக்கு சமூகமளிக்குமாறு அழைக்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

கடும் வெப்பம்: பல பகுதிகளில் எச்சரிக்கை நிலை

இன்று (18) கிழக்கு மாகாணம் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா,...

ஈரான் குற்றச்சாட்டை அமெரிக்கா மறுப்பு

அமெரிக்க தாக்குதலில் பொதுமக்கள் உள்கட்டமைப்பு சேதமடைந்ததாக ஈரான் குற்றச்சாட்டு; அமெரிக்கா மறுப்பு போர்நிறுத்த...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் விபரீத முடிவுக்கு இதுதான் காரணமா?

முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி. விக்ரமரத்ன நேற்று காலை (17) மலாபேயில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்