கொரோனா சிகிச்சைக்கு சென்ற தம்பதி வீட்டுக்குள் பணிப்பெண்ணின் சடலம்!

Date:

ஹொரண – வேகட வீதியின் பெரண்டிய விகாரைக்கு அருகில் பூட்டப்பட்ட வீட்டில் இருந்து 86 வயதுடைய பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற ஆசிரியர்களான தம்பதியினரின் வீட்டு பணிப்பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வீட்டு உரிமையாளர்களான தம்பதியினர் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அந்த வீட்டு பணிப்பெண் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளவில்லை. ஆசிரியர் தம்பதி வைத்தியசாலைக்கு சென்ற பின்னர், பணிப்பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டார்.

அவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது. அவருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இலங்கை தபால் திணைக்களம் அமெரிக்காவுக்கு அனுப்பிய 625,000 டொலர் பணமும் மாயம்!

இலங்கையிலிருந்து அமெரிக்க தபால் சேவைக்கு அனுப்பப்பட்ட 625,000 டொலர் பணம் தங்களுக்கு...

இலங்கை கிரிக்கெட் தலைவர், செயற்குழு பதவிவிலக முடிவு!

இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வாவும், இலங்கை கிரிக்கெட் சபை செயற்குழுவும்...

அரச நிதி மோசடிச் சம்பவம் ஹக்கிங் அல்ல; போல ஆவணங்கள் மூலமான திருட்டு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்