மன்னாரில் மாட்டியது மஞ்சள்!

Date:

சட்ட விரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட ஒரு தொகுதி உலர்ந்த மஞ்சள் மூடைகளை இன்று வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் மன்னார் பெரியகடை கடற்கரை கலப்பு பகுதியில் வைத்து இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.

மன்னார் இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட இராணுவத்தினர் மன்னார் பெரியகடை கடற்கரை கலப்புப் பகுதியில் வைத்து சட்ட விரோதமாக நாட்டக்குள் கொண்டு வரப்பட்ட 18 மூடைகளில் பொதி செய்யப்பட்ட 672 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மூடைகள் இவ்வாறு கைப்பற்றப்பட்டது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய வள்ளங்கள் 3 மற்றும் பட்டா ரக வாகனமும் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டது.சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த பொருட்கள் இன்று வியாழக்கிழமை (8) காலை 9 மணியளவில் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

2 சிப்பாய்கள் கொல்லப்பட்டதால் ஆத்திரமடைந்துள்ள அமெரிக்கா!

இஸ்லாமியக் குடியரசுடன் மீண்டும் தொடங்கிய மோதல்களுக்குப் பிறகு ஏற்பட்ட முதல் அமெரிக்க...

வருமானவரி செலுத்தாதவர்கள் மீது சட்டநடவடிக்கை

தங்கள் குறிப்பிட்ட வருமான வரி கடமைகளை வேண்டுமென்றே நிறைவேற்றத் தவறும் தனிநபர்கள்...

தமிழகத்தில் சட்டவிரோத செயற்பாட்டில் த.வெ.க பிரமுகர்கள்

அரசியல்வாதிகள் தங்களது வாகனங்களில் பதிவெண்ணுக்கு பதில் கட்சியின் பதவிப் பலகையும், கட்சிக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்