முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூரிய நாட்டை விட்டு நிரந்தரமாக வெளியேற தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் கிரிக்கெட் தொடர்பான எந்தவொரு பங்களிப்பிற்கும் அவரை அழைக்காதது, அவரை விரக்தியடைய வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை, அவுஸ்திரேலியாவில் உள்ள மாநில கிரிக்கெட் கிளப்பின் பயிற்சியாளராக ஜெயசூரிய பொறுப்பேற்க அழைக்கப்பட்டுள்ளார்.
அதே நேரத்தில், அவுஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிடத்தை வழங்க முன்மொழியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், ஜெயசூரிய தனது குடும்பத்துடன் அவுஸ்திரேலியா செல்ல தயாராகி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த தேர்தல்களில் பொதுஜன பெரமுனவிற்காக ஜெயசூரிய தீவிரமாக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




