யட்டியாந்தோட்டை- பனாவத்தை பகுதியிலிருந்து, நவட்ட பகுதிக்கு முச்சக்கர வண்டியில் பாதுகாப்பற்ற முறையில் கொண்டு செல்லப்பட்ட சுகாதாரப் பிரிவினர் அணியும் பாதுகாப்பு அங்கிகள், யட்டியாந்தோட்டை சுகாதார வைத்திய அதிகாரிகளால், யட்டியாந்தோட்டை நகரில் நேற்று (15) தீ மூட்டி எரிக்கப்பட்டது.
இந்த ஆடைகள் தைக்கப்பட்ட இடத்தில் இருவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். துணிகளை இறக்குமதி செய்தவர் மற்றும் அவரது மனைவி கொரோனா நோயாளிகள் என்றும் தெரிய வந்துள்ளது.
இவ்வாறான ஆடைகளை தயாரிக்கும் 13 இடங்களை ஆராயவுள்ளதாக பொதுசுகாதார பரிசோதர்கள் தெரிவித்துள்ளனர்.




