பிறந்தநாளில் ‘விஜய் 66’ படத்தின் அறிவிப்பு!

Date:

விஜய்யின் 66வது படத்தின் அறிவிப்பை, அவரது பிறந்த நாளில் வெளியிட படக்குழு தயாராகி வருகிறது.

‘மாஸ்டர்’ படத்திற்கு பிறகு நடிகர் விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் நடித்து வருகிறார். பெயரிடப்படாத இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது சன் பிக்சர்ஸ். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் 16 நாட்கள் முடிந்துள்ள நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் துவங்கவுள்ளது.

இந்த படத்திற்கு பிறகு விஜய் அடுத்து நடிக்கவிருக்கிற படம் குறித்த தகவல் ஏற்கனவே வெளியாகியுள்ளது. விஜய்யின் 66வது படமாக உருவாகும் இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்ஷி படைப்பள்ளி இயக்கவுள்ளார். இவர், தமிழில் கார்த்தியின் நடிப்பில் வெளியான ‘தோழா’, மகேஷ் பாபுவின் ‘மகரிஷி’ உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கியவர். தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கவுள்ளார்.

இந்த படத்தின் ஸ்கிரிப் பணிகளை வேகமாக செய்து வருகிறார் இயக்குனர் வம்சி. இதோடு நடிகர், நடிகைகள் தேர்வும் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பை அடுத்த ஜனவரியில் தொடங்க திட்டமிட்டுள்ளார் வம்சி. இந்நிலையில் நடிகர் விஜய்யின் பிறந்தநாள் வரும் ஜூன் 22ம்  கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விஜய்யின் 66வது படத்தின் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட தேசிய இளைஞர் சேவை...

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட ஹோமாகம குற்றத்தடுப்புப் பொறுப்பதிகாரி கைது!

ஹோமாகம பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி (OIC), பொலிஸ் காவலில் இருந்த...

ஐநூறு போதை மாத்திரைகளுடன் சிஜடியினரால் யாழில் இருவர் கைது

யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்