கொரோனா தொற்றினால் உயிரிழந்த 101 மரணங்கள் நேற்று (10) உறுதி செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்தது.
இந்த மரணங்கள், பெப்ரவரி 6 ஆம் திகதி முதல் ஜூன் 09 வரையான காலப்பகுதியிலுள்ள 19 நாட்களில் நிகழ்ந்துள்ளன.
பெப்ரவரி 06 மற்றும் ஏப்ரல் 01 ஆம் திகதிகளில் தலா ஒவ்வொரு மரணம் நிகழ்ந்துள்ளது. மே 15 முதல் 29 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 13 மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
ஜூன் 1ஆம் திகதி முதல் 09 வரையான காலப்பகுதியில் 88 மரணங்கள் நிகழ்ந்துள்ளன.





