வடக்கில் நேற்று 144 பேருக்கு தொற்று; யாழில் மட்டும் 116 பேருக்கு தொற்று!

Date:

வடமாகாணத்தில் நேற்று 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

யாழ் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவபீட ஆய்வுகூடங்களில் நேற்று 847 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இதில், யாழ் மாவட்டத்தில், கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 37  பேர், யாழ் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 22 பேர், கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 12 பேர், யாழ் போதனா வைத்தியசாலையில் 8 பேர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 2 பேர், பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11 பேர், யாழ் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 15 பேர், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேர் என 116 பேர் தொற்றுடன் கண்டறியப்பட்டனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தல், மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர்,  முல்லைத்தீவு வைத்தியசாலையில் ஒருவர் என, 3 பேர் பேர் தொற்றுடன் கண்டறியப்பட்டனர்.

மன்னார் மாவட்டத்தில், மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒருவர் தொற்றுடன் கண்டறியப்பட்டார்.

வவுனியா மாவட்டத்தில், வவுனியா தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேர், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 20 பேர் என, 23 பேர் தொற்றுடன் கண்டறியப்பட்டனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில், தர்மபுரம் ஆதார வைத்தியசாலையில் ஒருவர் பேர் தொற்றுடன் கண்டறியப்பட்டார்.

 

spot_imgspot_img

More like this
Related

வெவ்வேறு காலகட்டத்தில் புதைக்கப்பட்ட உடல்கள்… மயானத்தில் மாற்றம் நிகழ்ந்திருக்கலாம்: செம்மணி புதைகுழி அறிக்கையின் முழுமையான தொகுப்பு!

செம்மணி சிந்துபாத்தி இந்து மயானத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சி குறித்த முதல் நிபுணர்...

மட்டக்களப்பு கடற்படையின் விசேட நடவடிக்கையில் கடலில் 2 கோடி ரூபா பெறுமதியான 4 சட்டவிரோத சுருக்குவலை மீட்பு —

மட்டக்களப்பு கடற்படையினர் சட்டவிரோத சுருக்கு வலைகளை தேடி விசேட நடவடிக்கையின் போது...

செம்மணிப் புதைகுழி: தொற்றுநோய் கூற்றுக்குத் தமிழர் புலம்பெயர் செய்தி அமைப்பு கடும் கண்டனம்!

யாழ்ப்பாணம் செம்மணிப் புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் தொற்றுநோய் அல்லது இயற்கைப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்