UPDATE: மன்னாரில் கரையொதுங்கும் எக்ஸ்பிரஸ் பேர்ள் பிளாஸ்டிக் கழிவுகள்!

Date:

தீபற்றிய எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள பிளாஸ்ரிக் துகள்கள் என நம்படுபவை இன்று வியாழக்கிழமை(10) மன்னார் வங்காலை மற்றும் சிலாவத்துறை கடற்பரப்பில் கரை ஒதுங்கியுள்ளன.
இலட்சக்கணக்கான சிறிய பிளாஸ்ரிக் துகள்கள் மற்றும் முக கிரீம் ஒன்றும் கரையொதுங்கியுள்ளன. மன்னார் கடற்படை மற்றும் நீரியல் வள திணைக்கள அதிகாரிகள் முதல் கட்டமாக சம்பவம் இடம் பெற்ற பகுதிக்கு வந்து கரையொதுங்கிய பொருட்களை பார்வையிட்டதுடன் கரையொதுங்கிய பொருட்களின் மாதிரிகளையும் சேகரித்துள்ளனர்.
அதே நேரம் குறித்த கடல் பகுதிக்கு வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் மன்னார் மாவட்ட அரசாங்க  அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மெல் உட்பட அதிகாரிகள்   வந்து நேரடியாக  பார்வையிட்டுள்ளனர்.
நேற்று நள்ளிரவு தொடக்கம் தற்போது வரை மேற்படி பொருட்கள் கரை ஒதுங்கி வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளதாக வங்காலை மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
spot_imgspot_img

More like this
Related

குவைத்தில் 2 இலங்கைப் பெண்களின் மரணம் குறித்து விசாரணை

குவைத்தின் அலி சபா அல்-சலீம் மற்றும் அல்-நஹ்தா ஆகிய இடங்களில் தனித்தனி...

12 வயது சிறுவனை கொன்ற முதலை

கல்கிரியகம காவல் பிரிவுக்கு உட்பட்ட மனேருவ பகுதியில் உள்ள வம்பதுவெவ என்னுமிடத்தில்,...

சோமதேவாவின் அறிக்கையை நிராகரிக்கிறோம்

செம்மணி மனித படுகொலை தொடர்பாக தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் அறிக்கையை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்