சர்வதேச அளவில் முக்கிய இணையத்தளங்கள் முடங்கின!

Date:

சர்வதேச அளவில் பல முக்கிய இணையதளங்கள் சில மணி நேரம் செயல்படாமல் முடங்கின.

ரெட்டிட், ஸ்பாடிஃபை, ஹெச்பிஓ மக்ஸ், அமேசன்.கொம், ஹூலு, கார்டியன், நியூயோர்க் டைம்ஸ், பிபிசி உள்ளிட்ட எண்ணற்ற இணையதளங்கள் திடீரென செயல்படாமல் முடங்கின. இந்த இணையதளங்களுக்குச் சென்ற பயனர்களுக்கு, 503 எரர் செய்தி மட்டுமே திரையில் தோன்றியது.

இதனால் இலட்சக்கணக்கான பயனர்கள் இதுகுறித்து சமூக வலைதளங்களில் பதிவிடத் தொடங்கினர். இதற்குக் காரணம் இந்தத் தளங்களுக்கு க்ளவுட் சேவை தரும் ஃபாஸ்ட்லி என்கிற அமெரிக்க நிறுவனம் என்பது தெரியவந்துள்ளது.

ஃபாஸ்ட்லியின் க்ளவுட் சேவையில் ஏதோ பிரச்சினை ஏற்பட்டதால், அதன் வாடிக்கையாளராக இருக்கும் முக்கிய இணையதளங்கள் அனைத்தும் முடங்கின. இதுகுறித்து விசாரித்து வருவதாக ஃபாஸ்ட்லி பதிவிட்டது.

சிறிது நேரத்தில் பிரச்சினை என்ன என்பது அடையாளம் காணப்பட்டுச் சரிசெய்யப்பட்டு வருவதாக ஃபாஸ்ட்லி பதிவிட்டது. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக முடங்கிய இணையதளங்கள் மீண்டும் வேலை செய்ய ஆரம்பித்துள்ளன. இதனால் சர்வதேச அளவில் ஃபாஸ்ட்லியின் பெயர் ட்விட்டரில் முதலிடத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

அனோஜனை காப்பாற்றிய சட்ட நுணுக்கங்கள்!

சவூதி அரேபியாவின் உச்ச நீதிமன்றம், இலங்கை புலம்பெயர் தொழிலாளியான அனோஜன் சிவராசாவுக்கு...

இலங்கையில் ஆறரை வருடத்தில் 5வது முறையாக நாடளாவிய மின்வெட்டு

இலங்கையில் நேற்று, 2020 பெப்ரவரி மாதத்திற்குப் பிறகு ஐந்தாவது முறையாக நாடு...

தடைசெய்யப்பட்ட அதிவேக மோட்டார் சைக்கிள்கள் யாழில் பறிமுதல்

இலங்கையில் தடை செய்யப்பட்ட அதிக வேகத்திறன் (சி.சி) கொண்ட 5 மோட்டார்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்