ஒரு மீனின் விலை ரூ7.8 லட்சம்… அப்படி என்ன இருக்கிறது இந்த மீனில்!

Date:

கடலில் மிக அரிதாக கிடைக்கும் குரோக்கர்ரக மீன் ஒரு மீன் ரூ7.8 லட்சத்திற்கு விற்பனையாகியுள்ளது. இந்த மீன்கள் மருத்துவ பயன்பாட்டிற்காக அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மிக அரிதாக கிடைக்கும் என்பதால் இந்த மீனிற்கு இந்த விலை கிடைக்கிறது.

பாகிஸ்தானில் குவாதர் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் சிலர் குரோக்கர்என்ற அரியவகை மீனை பிடித்தனர் சுமார் 26 கிலோ எடை கொண்ட இந்த மீன் சுமார் ரூ 7.80 லட்சத்திற்கு பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் விற்பனையானது. ஒரு மீன் ரூ 7.80 லட்சத்திற்கு விற்பனையானது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பும் இதே ரக மீன் சுமார் 17 லட்சத்திற்கு விற்பனையானது. நாம் இந்த பதிவில் அந்த மீன் ஏன் இவ்வளவு விலைக்கு விற்பனையானது. இந்த விலைக்கு வாங்கும் அளவிற்கு இந்த மீனில் என்ன இருக்கிறது என்று தான் பார்க்கபோகிறோம் வாருங்கள். காணலாம்.

​மருத்துவ குணங்கள்

இந்த குரோக்கர்ரக மீன் அதிக மருத்துவ குணங்கள் வாய்ந்தது. இந்த மீனில் காணப்படும் ஏர் பிளாடர் என்ற பகுதி மருத்துவ அறுவை சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இது அறுவை சிகிச்சை முடிந்ததும் தையல் போடப்படும் போது பயன்படும். இதை பயன்படுத்தி அறுவை சிகிச்சை செய்தால் பக்கவிளைவுகளின்றி காயம் குணமாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக இதயம் தொடர்பான அறுவை சிகிச்சைகளின் போது இதை பயன்படுத்தினால் காயம் வெகு சுலமாக ஆறுவது மட்டுமில்லாமல் பக்கவிளைவுகள் இல்லாமல் இருக்குமாம். இதை பயோடெக்னாஜி இன்பர்மேஷன் ஆய்வு மையம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. குறிப்பாக குரோக்கர்ரக மீன்களில் மஞ்சள் க்ரேக்கர் ரக மீன்களில் தான் அதிகம் மருத்துவ குணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த மீன் கேன்சர் வியாதி மேலும் பரவாமல் தடுக்கிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் கேன்சர் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இந்த மீன் மிகப்பெரிய மருந்தாக இருக்கிறது. குறிப்பாக அவர்களின் வாழ்நாளையே அதிகரிக்கும் குணம் இந்த மீனிற்கு இருப்பதாக டாக்டர்கள் சொல்கின்றனர். இந்த மீன் மனிதர்களுக்கு ஏற்படும் காயங்கள் மற்றும் தொற்றுகளை சரி செய்யவும் பயன்படுகிறது.

croaker fish: ஒரு மீனின் விலை ரூ7.8 லட்சம்... அப்படி என்ன இருக்கிறது இந்த  மீனில்? - most expensive fish in the world croaker fish used to treat  disease and surgery allyou need to know |

பொதுவாக இந்த ரக மீன்கள் சீனா – கொரியாவிற்கு இடைபட்ட கடற்பகுதியான சவுத் எல்லோ கடல் பகுதியில் அதிகம் காணப்படும். ஆனால் இந்த ரக மீன்களை பிடிப்பது மிகப்பெரிய சவாலான விஷயம். ஏன் என்றால் இந்த மீன்கள் பெரும்பாலும் கடலின் ஆழத்தில் வாழும் குணம் கொண்டது.

இது கருவுறும் காலம் தான் கடலின் மையப்பகுதிக்கோ அல்லது மேற்பகுதிக்கோ வரும். அதுவும் இந்த மீன்களின் கருவுறும் காலம் வெறும் 2 மாதங்கள் தான். அதனால் ஆண்டிற்கு 2 மாதம் மட்டுமே இந்த மீன்களை பிடிக்கும் வாய்ப்பு கிடைக்கும். இதுவும் இந்த ரக மீன்கள் அதிக விலைக்கு விற்பனையாவதற்கு முக்கியமான காரணம்.

spot_imgspot_img

More like this
Related

யாழ்ப்பாணத்தில் புதிதாக அனுமதிக்கப்பட்ட நான்கு மதுபானசாலைகளின் அனுமதிகளை ரத்துச் செய்யக் கோரி வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினர் போராட்டம்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிதாக அனுமதியளிக்கப்பட்ட நான்கு மதுபானசாலைகளின் அனுமதிகளை ரத்துச் செய்யுமாறு...

சிறைகளில் மதத் தலைவர்களின் நிலைகண்டு வெம்பியிருக்கிறேன் – அநுர ஜனாதிபதிக்கு நினைவுபடுத்திய டக்ளஸ்

அனைத்து மதங்களின் தலைவர்களும் சிறைச்சாலைகளில் கௌரவமாக நடாத்தப்படுவதை சட்டத்தின் ஊடாக உறுதிப்படுத்த...

அனோஜன் சிவராசாவின் மரண தண்டனை இரத்துச் செய்யப்பட்டமை சகோதரத்துவ நம்பிக்கையை வலுப்படுத்துகிறது – காரைதீவு தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்