‘தளபதி 65’ படத்தில் நடிப்பதை உறுதி செய்த யோகிபாபு!

Date:

விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் மூலம் நடிகை பூஜா ஹெக்டே முதன்முறையாக விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.

தற்போதைய அப்டேட் என்னவென்றால், இந்தப் படத்தில் நடிப்பதை யோகிபாபு உறுதி செய்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே யோகிபாபு தளபதி 65 படத்தில் நடிக்கிறார் என்று கூறப்பட்டு வந்தது. சமீபத்தில் ரசிகர் ஒருவர் யோகிபாபுவிடம் நீங்கள் தளபதி 65 படத்தில் நடிக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு ஆம் என்று யோகிபாபு பதிலளித்து உறுதி செய்துள்ளார்.

யோகிபாபு ஏற்கனவே மெர்சல், சர்க்கார் மற்றும் பிகில் ஆகிய படங்களில் விஜயுடன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனா அச்சுறுத்தலால் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. லாக்டவுன் முடிந்ததும் சென்னையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

spot_imgspot_img

More like this
Related

கொலையாளியின் மர்ம மரணம் தொடர்பில் பொலிஸ் அதிகாரி கைது!

பாதாள உலகத் தலைவன் 'லொகு பட்டி' என்பவனுக்காக கூலிப்படையினராகச் செயல்பட்டதாகக் கூறப்படும்...

யேமன் ஜனாதிபதி மாளிகை மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்திய ஹூதிகள்

ஈரான் ஆதரவு ஹூதி போராளிகள், யேமனின் இடைக்காலத் தலைநகரான ஏடனில் உள்ள...

ட்ரம்ப்- ஜெலென்ஸ்கி மோதல் முற்றுகிறது!

அமெரிக்க-ரஷ்ய டீசல் ஒப்பந்தம் தொடர்பாக இரு தலைவர்களுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்