மரக்கறி வாங்க தந்த பணத்தில் சூது விளையாடியதால் இளம் குடும்பஸ்தர் தற்கொலை!

Date:

வீட்டுக்கு மரக்கறி வாங்குவதற்காக மனைவி தந்த பணத்தை கூது விளையாடி செலவிட்டதால், இளம் குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டாரக்கட்டு காட்டுப்பகுதியில் சம்பவம் இடம்பெற்றது.

வேப்பவெட்டுவான் வீதி, பாலர்சேனையை சேர்ந்த செங்கல் வாடியில் கூலித் தொழிலுக்கு செல்லும் 20 வயதுடைய நடராசா தினேஷ் என்பவரே தூக்கிட்டு மரணமடைந்தவராவார்.

ஒரு பெண் குழந்தையின் தந்தையான இவர், நேற்று முன்தினம் (05) மதியம் மரக்கறி மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக மனைவியிடம் 1000 ரூபா பணம் பெற்றுச்சென்று, அப்பணத்தை சூது விளையாடி தோற்றதால், மரக்கறி வாங்க முடியாமல் வீடு திரும்பிய போது மனைவியுடன் முரண்பட்டு வெளியேறிச் சென்றே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் என விசாரணைகள் மூலம் தெரிய வந்தது.

பிசிஆர் மற்றும் பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

வெனிசுலா நிலநடுக்க உயிரிழப்பு 3,500ஐ கடந்தது!

வெனிசுலாவின் இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,535 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள்...

நீர்கொழும்பு சிறைக்கலவரம்: துப்பாக்கிகளை பறித்து சுட்ட கைதிகள்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவம் குறித்து முறையான மற்றும் விரிவான...

சாவகச்சேரி உபதவிசாளர் விவகாரம்: இடைக்கால கட்டளைக்கு நீதிதன்றம் மறுப்பு

சாவகச்சேரி நகராட்சி மன்றம் உப தவிசாளர் மற்றும் சபையின் உறுப்புரிமையிலிருந்து தன்னை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்