வவுனியாவில் சுகாதார கட்டுப்பாடுகளை மீறி இடம்பெற்ற வியாபாரம்: திலீபன் எம்.பி திடீர் நடவடிக்கை!

Date:

வவுனியாவில் சுகாதார கட்டுப்பாடுகளை மீறி இடம்பெற்ற வர்த்தக நடவடிக்கைகளை கண்காணிக்கும் முகமாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபன் இன்று (05) திடீர் சோதனை நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்திருந்தார்.

வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் ஐஸ்கிறீம் வியாபாரத்தில் ஈடுபட்ட வாகனத்தை வழிமறித்த பாராளுமன்ற உறுப்பினர் ஐஸ்கிறீம் வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் பின்பற்றிய சுகாதார நடைமுறைகளின் குறைபாடுகளை சுட்டிக் காட்டியதுடன், அனுமதியின்றி வியாபாரத்தில ஈடுபட வேண்டாம் எனவும், வியாபாரத்தில் ஈடுபட முறையான அனுமதியைப் பெற வேண்டும் எனவும் தெளிவு படுத்தி ஐஸ்கிறீம் வியாபாரத்தில் ஈடுபட்ட வாகனத்தை திருப்பி அனுப்பினார்.

இதனையடுத்து வேப்பங்குளம் பகுதியில் உள்ள ஐஸ்கிறீம் வியாபார நிலைய உரிமையாளரை அழைத்து தற்போதும் ஐஸ்கிறீம் வியாபாரத்தில் ஈடுபடுகின்றீர்களா என வினவியதுடன், குறித்த விற்பனை நிலையத்தின் பெயரில் அனுமதியின்றி வேறு நபர்களால் பயணத்தடை நேரத்தில் மேற்கொள்ளப்படும் வியாபார நடவடிக்கைகளை நிறுத்துமாறும், முறையான அனுமதியைப் பெற்றால் மாத்திரம் வியாபாரத்தில் ஈடபட முடியும் எனவும் அறிவுறுத்தினார்.

மேலும், பண்டாரிக்குளம் பகுதியில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்ட வாகனத்தை வழிமறித்து அந்த வாகனத்தில் விற்பனை செய்யப்படும் மரகறிகளின் விலைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டதுடன், சரியான கட்டுப்பாட்டு விலையை பேணுமாறும் அதனை மீறி விற்பனை செய்தால் அனுமதி ரத்து செய்யப்படும் எனவும் இதன்போது அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் கடந்த 9 மாதத்தில் 92 பேர் தற்கொலை மீண்டும் அதிகரிக்கும் தற்கொலைகள்–

மட்டக்களப்பு நாவற்குடா பிரதேசத்தில் 44 வயது பெண் ஒருவர் வீட்டின் அறையின்...

அனோஜனை காப்பாற்றிய சட்ட நுணுக்கங்கள்!

சவூதி அரேபியாவின் உச்ச நீதிமன்றம், இலங்கை புலம்பெயர் தொழிலாளியான அனோஜன் சிவராசாவுக்கு...

இலங்கையில் ஆறரை வருடத்தில் 5வது முறையாக நாடளாவிய மின்வெட்டு

இலங்கையில் நேற்று, 2020 பெப்ரவரி மாதத்திற்குப் பிறகு ஐந்தாவது முறையாக நாடு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்