சீனாவில் அடுத்த வில்லங்கம்: முதல்முறையாக மனிதருக்கு பறவைக் காய்ச்சல்!

Date:

சீனாவில் முதல்முறையாக மனிதருக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவிபெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் வௌவால்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதாகவும், சீன ஆய்வகத்தில் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த பின்னணியில் சீனாவில் முதல்முறையாக மனிதர் ஒருவருக்கு H10N3 என்ற வகையைச் சேர்ந்த பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், “ஜென்ஜியாங் நகரில் 41வயது நபருக்கு கடந்த ஏப்ரல் 28ஆம் திகதி பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகிறோம். அவரது உடல்நலம் தேறியுள்ளது. விரைவில் அவர் வீடு திரும்புவார். அவரது குடும்பத்தினரை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறோம். அவரோடு தொடர்பில் இருந்தவர்களை தேடி வருகிறோம். இந்தவகை வைரஸ் மனிதர்களுக்கு பரவுவது அரிது” என கூறப்பட்டுள்ளது.

அவருக்கு எவ்வாறு பறவைக் காய்ச்சல் ஏற்பட்டது என்பது குறித்து சீன அரசு எவ்வித விளக்கத்தையும் வெளியிடவில்லை.

கொரோனாவால் ஏற்பட்டு வரும் பேரழிவு காரணமாக, சீனாவில் புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டதால் ஒட்டுமொத்த உலகத்தின் கவனமும் அந்த நாட்டின் மீது திரும்புகிறது.

இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத அமெரிக்க, ஐரோப்பிய விஞ்ஞானிகள் கூறியதாவது:

சீனாவில் பல்வேறு வகையான பறவைக் காய்ச்சல்கள் ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளன. கடந்த 2016-17ஆம் ஆண்டில் H7N9 வைரஸ் பறவைக் காய்ச்சலால் 300 பேர்உயிரிழந்தனர். கோழிப்பண்ணை ஊழியர்களே பறவைக் காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். கடந்த பெப்ரவரியில் சீனாவின் லியான்யங்கங் நகரில் H5N8 என்ற பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டது. இது மனிதர்களை எளிதில் தொற்றும் தன்மைகொண்டது.

தற்போது சீனாவில் முதல்முறையாக H10N3 வைரஸ் வகை பறவைக்காய்ச்சல் மனிதருக்கு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீன அரசு உண்மைகளை மூடி மறைக்கும் என்பதால் இந்த விவகாரத்தை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்“ என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

நாடு முழுவதும் ‘ரடம ஏகட்ட’ விசேட நடவடிக்கை – 700-க்கும் மேற்பட்டோர் கைது

நாடு முழுவதும் நேற்று (ஜூலை 17) முன்னெடுக்கப்பட்ட ‘ரடம ஏகட்ட’ (Ratama...

பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதி, மருதமுனை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு...

கடும் வெப்பம்: பல பகுதிகளில் எச்சரிக்கை நிலை

இன்று (18) கிழக்கு மாகாணம் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்