கொரானா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் ‘சென்னை 28’ நடிகர்கள்! (வீடியோ)

Date:

கொரானா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ‘சென்னை 28’ படத்தின் நடிகர்கள் வீடியோவை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

கொரானாவால் தமிழகத்தின் நிலை மோசமாகி கொண்டே வருகிறது. இதை தடுக்க பல்வேறு யுத்திகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. உயிரிழப்புகள் அதிகரித்துக்கொண்டே வருவது அனைவரையும் கவலையடைய செய்கிறது. கொரானாவிலிருந்து நம்மை பாதுகாக்கும் வகையில் விழிப்புணர்வை அரசு ஏற்படுத்தி வருகிறது.

அதேபோன்று சினிமா நட்சத்திரங்களும் பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையில் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் ‘சென்னை 28’ படத்தில் நடித்த பிரேம்ஜி, நிதின் சத்யா, அரவிந்த் ஆகியோர் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில் முதலில் பேசிய பிரேம்ஜி, எல்லோரும் ஜாக்கிரதையாக, பாதுகாப்பாக இருங்கள், நாங்கள் சமூக இடைவெளியுடன் இருந்து வருகிறோம். நாங்கள் மாஸ்க் போட்டிருக்கோம். நீங்களும் மாஸ்க் போட்டுக்கொள்ளுங்கள். கொரானா தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என்று தெரிவித்தார். அடுத்து பேசிய நிதின் சத்யா, சமூக இடைவெளியை கடைப்பிடியுங்கள். தயவு செய்து தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். அவசியம் இருந்தால் மட்டுமே வெளியே போங்க. பாதுகாப்பாக இருங்க என்று கூறியுள்ளார். கடைசியாக பேசிய அரவிந்த், மாஸ்க் போட்டுக்கொண்டு பாதுகாப்பாக இருங்கள் என கேட்டுக்கொண்டார்.

spot_imgspot_img

More like this
Related

கறுப்பு ஜீலை இனப்படுகொலையில் பலியான தமிழ் மக்களுக்குப் பொது நினைவுச்சின்னம் அமைக்கப்பட வேண்டும்

கறுப்பு ஜீலை இனப்படுகொலையில் பலியான தமிழ் மக்களுக்குப் பொது நினைவுச்சின்னம் அமைக்கப்பட...

மட்டக்களப்பில் பாதுகாப்பு படையினரின் பெயரை போலியாக பயன்படுத்தி கடைகளில் நூதனமாக பண மோசடி ஈடுபட்ட நபரை கைது செய்ய நடவடிக்கை

மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பிரதேசங்களில் உள்ள யூஸ் விற்பனை நிலையங்கள் மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்