இரத்தினபுரியை கலக்கிய முச்சக்கர வண்டி திருட்டு கும்பல் சிக்கியது!

Date:

இரத்தினபுரி பகுதியில் முச்சக்கர வண்டிகள் தொடர்ந்து திருடப்பட்ட மர்மத்தை பொலிசார் கண்டறிந்துள்ளனர். முச்சக்கர வண்டிகளை திருடி, மீண்டும் வேறு வர்ணம் பூசப்பட்டு, நம்பர் பிளேட்டுகள் மாற்றப்பட்டு விற்பனை செய்து வந்த கும்பலை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹன தெரிவித்தார்.

இரத்தினபுரி பகுதியில் தினமும் குறைந்தது இரண்டு முதல் மூன்று முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் தினமும் திருடப்பட்டதாக கடந்த காலங்களில் வழக்குகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

இது தொடர்பில் விசாரணை நடத்திய பொலிசார், திருடப்பட்ட முச்சக்கர வண்டியுடன் ஒரு நபரை கைது செய்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணைகளில் நேற்று திருடப்பட்ட 13 முச்சக்கர வண்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

spot_imgspot_img

More like this
Related

யாழில் பட்டாசு வெடித்து இளைஞன் பலி

யாழ்ப்பாணம் குருநகர் 5 மாடி குடியிருப்பு பகுதியில் இன்று (02) அதிகாலை...

இளைஞர் உயிரிழப்பு பட்டாசு வெடித்து

பட்டாசு வெடித்து இளைஞர் உயிரிழப்பு – யாழ்ப்பாணத்தில் துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் குருநகர்...

யாழில் 18 வயதான இரட்டை சகோதரிகள் தீமூட்டி உயிர்மாய்த்தனர்!

யாழ்ப்பாணம், ஏழாலை பகுதியில் தமக்கு தாமே தீமூட்டி 18 வயதான இரட்டை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்