முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களிற்கு நானாட்டான் பிரதேசசபையில் அஞ்சலி!

Date:

இறுதி யுத்தத்தின் போது முள்ளி வாய்க்காலில் உயிர் நீத்த மக்களுக்கு இன்றைய தினம் வியாழக்கிழமை (13) நானாட்டான் பிரதேச சபையின் 39 வது அமர்வின் போது சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நானாட்டான் பிரதேச சபையின் அமர்வு இன்று வியாழக்கிழமை (13) காலை 10 மணியளவில் நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர் திருச் செல்வம் பரஞ்சோதி தலைமையில் இடம் பெற்றது.

இதன் போது நானாட்டான பிரதேச சபையின் உறுப்பினர் ஆர்.ஜீவன் அவர்களின் ஏற்பாட்டில் இறுதி யுத்தத்தின் போது முள்ளி வாய்க்காலில் உயிர் நீத்த மக்களுக்கு அஞ்சலி நிகழ்வு இடம் பெற்றது.

இதன் போது நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர், சக உறுப்பினர்கள் கலந்து கொண்டு உயிர் நீத்த மக்களுக்கு சுடர் ஏற்றி 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.அதனைத் தொடர்ந்து சபை அமர்வு இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

காரைதீவில் யானைகளின் நடமாட்டத்தால் மக்கள் அச்சம் – மனித–யானை மோதலைத் தடுக்க வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

காரைதீவு பிரதேசத்தின் பல பகுதிகளில் அண்மைக்காலமாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில்,...

அரசுக்கு எதிராக 12ஆம் திகதி அடையாள உண்ணாவிரதம்: ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு

அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்து இரண்டு வருடங்கள்...

மனைவியின் தங்கையில் கண் வைத்த இராணுவச்சிப்பாய் கைது!

தனது மனைவியின் தங்கையான 15 வயது பாடசாலை மாணவியை வன்புணர்வு செய்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்