தனக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்த நடிகை சுனைனா!

Date:

தற்போது நடிகை சுனைனா தனக்கு கொரோனா தொற்று இருப்பதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “அனைவருக்கும் வணக்கம். அதிக ஜாக்கிரதையாக இருந்தும் எனக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளது. வீட்டில் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன். அத்தனை விதிமுறைகளையும் பின்பற்றி வருகிறேன்.

என் குடும்பத்தினர் தவிர யாருடனும் நான் தொடர்பில் இல்லை. அவர்கள் அனைவரும் தனிமையில் உள்ளனர். எனது சமூக வலைதளப் பக்கங்களை மொத்தமாக ஒதுக்கிவைத்துவிட்டு ஓய்வெடுக்க வேண்டும் என்கிற விருப்பம் இருந்தாலும், தேவை இருப்பவர்களுக்கு சிறிய அளவிலோ, பெரிய அளவிலோ உதவியாக இருக்கும் விஷயங்களைப் பகிரும் வாய்ப்பை நான் இழக்க விரும்பவில்லை.

தயவுசெய்து முகக் கவசம் அணியுங்கள், வீட்டிலேயே இருங்கள், உயிர்களைக் காப்பாற்றுங்கள். நான் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன்” என்று சுனைனா இந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

கிளிநொச்சி விபத்தில் இளைஞன் பலி

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் D7 பகுதியில் இன்று 03.09.2026 மதியம்...

சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை? 51 வயது அதிகாரி கைது

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலையொன்றில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம்...

தமிழ் மொழியில் தேசிய முதலிடம்! 188 புள்ளிகளுடன் யாழ் மாணவன் சபின் சாதனை

புலமைப் பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலம் தேசிய முதலிடம் –...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்