யாழ் மாநகர காவல் படை அங்கத்தவர்கள் 5 பேரும் கொழும்பு பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கு (4ஆம் மாடி) அழைக்கப்பட்டுள்ளனர்.
மாநகர கால்படை உறுப்பினர்களான 5 பேரையும், எதிர்வரும் 11ஆம் திகதி காலை 9 மணிக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கு வருமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
யாழ் மாநகரசபைக்கு இன்று மாலை இந்த அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
யாழ் நகரத்தை சுத்தமாக வைத்திருக்க உருவாக்கப்பட்ட மாநகர காவல்படையை உருவாக்கியமைக்காக யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




