யாழ்ப்பாணம்,இணுவிலை பூர்வீகமாக கொண்ட சசிகலா சுரேஷ், பிரித்தானியாவின் ஹாரோ நகரசபையின் முதலாவது தமிழ் பெண் துணை மேயராக பதவியேற்றுள்ளார்.
புதிய மேயராக கஸன்பார் அலி ஒரு மெய்நிகர் நிகழ்வில் பதவியேற்றுக் கொண்டார். தனது பதவிக்காலத்தில் பன்முகத்தன்மையை உறுதி செய்வதாக அவர் உறுதியளித்திருந்த நிலையில், இலங்கை தமிழ் பின்னணியை கொண்ட சசிகலா சுரேஷ் துணை மேயராக பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சசிகலாவின் தந்தை இணுவிலை சேர்ந்தவர். கணக்காளராக பணியாற்றிய அவர் நீண்டகாலத்தின் முன்னரே பிரித்தானியாவிற்கு குடிபெயர்ந்துள்ளார்.




