மகளுடன் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்த இளம் தாய்!

Date:

பிபிலை- பெரலியவத்தை கிராமத்தில் வசிக்கும் இளம் தாயொருவர் நேற்று இரவு (21) தனது மூன்று வயது மகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பிபிலை பொலிசார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்கள் பெரலியவத்தையை சேர்ந்த டி.எம்.நதிகா பிரியதர்ஷனி (24) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குடும்ப தகராறைத் தொடர்ந்து அந்தப் பெண்ணும் அவரது மகளும் வீட்டின் அருகே 40 அடி ஆழமுள்ள கிணற்றில் குதித்தனர். கிணற்றில் தாய் மற்றும் மகள் இறந்து கிடந்ததை உறவினர்கள் அவதானித்து பிபில பொலிசாருக்கு தெரிவித்தனர்.

இறந்த பெண்ணின் கணவர் ராணுவ வீரர் என்பது தெரிய வந்துள்ளது.

பிபில நீதிவான் சதுர பிரசன்ன அமரதுங்க இன்று (22) இறப்பு குறித்து விசாரணை நடத்த உள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

யாழில் சாரதி அனுமதிப்பத்திரம் பெற முயன்ற இளைஞன் பலி

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். அச்சுவேலி, பாரதி...

7,419 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் சித்தியடையவில்லை!

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதாரணதர பரீட்சையில் பங்கேற்ற மொத்தம்...

ஐஸ் சர்ச்சை: தெரணியகலவில் நடந்தது என்ன?

அவிசவெல்ல பொலிஸ் தலைமையகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்ட குழு ஒன்று, நேற்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்