வந்துரம்ப, லைல்வல பகுதியிலுள்ள 107 வயதான முதியவர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
அல்பர்ட் அபேகுணவர்தன என்ற அந்த முதியவர் நேற்று முன்தினம் (17) 107 வது பிறந்த நாளை கொண்டாடினார்.
அவர் 1915 அன்று வந்துரம்பவில் பிறந்தார். தச்சுவேலை மற்றும் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்ட அவர், ஒரு காலத்தில் “கார்பெண்டர்“ என்ற பெயரில் கிராம மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர்.
லீலாவதி விஜேகுணவர்தனவை 1942 இல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு 11 பிள்ளைகள் உள்ளனர். 70 பேரg்பிள்ளைகள் மற்றும் மூன்று கொள்ளுப் பேரப்பிள்ளைகள் உள்ளனர்.
அல்பர்ட் மற்றும் லீலாவதி ஆகியோர் தங்கள் இளைய மகனின் குடும்ப உறுப்பினர்களுடன் வந்துரம்ப லைல்வாலாவில் உள்ள குடும்ப வீட்டில் வசிக்கின்றனர்.
இலங்கை வரலாற்றில் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் வாக்குகளைப் பயன்படுத்தியதாக, அல்பர்ட் அபேகுணவர்தன கூறுகிறார்.
கிராமத்தில் விளையும் பயிர்களையே உணவாகப் பயன்படுத்துவதால், தனக்கு நீண்டகால நோய்கள் எதுவும் இல்லை என்றும் அவர் கூறுகிறார். சொந்த ஊரை விட்டு பிரிந்து வாழ விரும்பவில்லை, பிள்ளைகள் வெளிநாட்டில் வாழ்ந்தாலும் அந்த நாடுகளுக்கு செல்வதை விரும்புவதில்லை. தனது மனைவியுடன் தனது சொந்த வீட்டில் வாழ்வதே அவரது நோக்கமாக இருந்ததாக அவரது பிள்ளைகள் கூறுகின்றனர்.
அல்பர்ட்டின் மனைவி லீலாவதிக்கு வயது 97. இந்த தம்பதியினர் வந்துரம்ப மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் வயதான தம்பதிகள் என்றும் உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.




