முச்சக்கர வண்டி கட்டணங்கள் கட்டுப்படுத்த முடியாதளவில் உயர்வதால், அதை கட்டுக்குள் கொண்டு வர உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கட்டணங்களை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் ஒன்றியம் அறிவித்துள்ளது.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர, முச்சக்கர வண்டியில் முதல் கிலோமீட்டருக்கான கட்டணம் ரூ.120. இரண்டாவது கிலோமீட்டருக்கான கட்டணம்ரூ. 100 எனவும், இது இன்று முதல் அமுலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது மொபைல் ஆப்ஸ் மூலம் இயக்கும் முச்சக்கர வண்டி ஓட்டுனர்களும், ஆப்ஸ் அல்லது மீட்டர்கள் மூலம் இயக்காதவர்களும் முதல் கி.மீ கட்டணமாக ரூ. 250 அறவிடுகிறார்கள்.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக முச்சக்கர வண்டி கட்டணம் திருத்தியமைக்கப்பட்டு முதல் கிலோ மீட்டருக்கு ரூ. 100 மற்றும் இரண்டாவது கிலோ மீட்டருக்கு ரூ. 90 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் மீட்டர் முச்சக்கர வண்டிகள் முதல் கிலோ மீட்டருக்கு ரூ. 120 மற்றும் இரண்டாவது கிலோ மீட்டருக்கு ரூ.100 ரூபாய் அறவிடுவார்கள் என்றார்.
எனவே, வாகனத்தில் ஏறும் முன் கட்டணம் குறித்து விசாரிக்குமாறு தர்மசேகர மக்களிடம் கேட்டுக்கொண்டார்