காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டம் வேறு பாதையில் செல்லத் தொடங்கி விட்டது: கு.திலீபன் எம்.பி

Date:

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டம் வேறு பாதையில் செல்லத் தொடங்கி விட்டது என வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று (13.08) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது இந்த அரசாங்கம் சர்வகட்சி அரசாங்கம் ஒரு சிலரைத் தவிர சர்வகட்சி அரசாங்கமாகத் தான் உள்ளது. ஆனால் அந்த ஒரு சிலரும் எமது ஆளுக்கட்சிக்கு வாக்களித்தவர்கள் தான். ஜனாதிபதி அவர்கள் அனைத்து கட்சிகளையும தம்முடன் பேசி சர்வகட்சியில் இணையுமாறு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் சிலர் தலையையும், வாலையும் காட்டும் நிலை காணப்படுகின்றது. இன்னும் ஒரு சில நாட்களில் எல்லாம் சரியாகி விடும்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் 2000 ஆம் நாளை கடந்துள்ளது. இதில் பலர் பலவிதமான கருத்துக்களை முன்வைக்கிறார்கள். இந்தப் போராட்டம் முதன் முதலில் வவுனியா மாவட்டத்தில் தான் ஆரம்பிக்கப்பட்டது. வெறும் 12 பேருடன் வவுனியா தபால் நிலையம் முன்பாக ஆரம்பிக்கப்பட்டது. அந்த 12 பேரில் நானும் ஒருவன். எனது நண்பர்கள், உறவுகளுடன் இணைந்து கட்சி பேதமின்றி எவ்வித அரசியலுமின்றி இந்த போராட்டத்தை முன்னெடுத்தோம். ஆனால் நாட்கள் செல்ல செல்ல சில அரசியல்வாதிகளின் பின்புலத்தால் போராட்டத்தில் உள்ள சிலர் வேறு பாதையை நோக்கி செல்லக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாகவும், காணாமல் ஆக்டகப்பட்ட உறவுகளின் போராட்டம் தொடர்பாகவும் எமது அமைச்சர் ஊடாக ஜனாதிபதியிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளோம். நானும் ஒரு தமிழ் மகனாக அவர்களுக்கான பரிகாரம் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றேன். காணாமல் ஆக்கப்பட்டோருக்கான ஒரு பரிகாரம் வழங்கப்படும். விரைவில் அதனை எழுத்து வடிவில் கொடுக்கவுள்ளோம். கலந்துரையாடி அந்த தீர்வு எட்டப்பட்ட பின் அதனை வெளிப்படுத்த முடியும் எனத் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

நாட்டின் பொருளாதாரம் மீண்டுவிட்டதாகக் கூறினாலும், உங்கள் பர்ஸில் பணம் இருக்கிறதா? சாதாரண மக்களைத் தாக்கப்போகும் அடுத்த பேரிடி! உலக வங்கியின் பகீர் எச்சரிக்கை!

இலங்கையின் பொருளாதாரம் மீண்டாலும் மக்களின் வாழ்க்கையில் மாற்றமில்லை! உணவுப் பொருட்களின் விலையேற்றம்...

லலித் – குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு! நீதிமன்றில் முன்னிலையான கோட்டாபய ராஜபக்ச!

காணாமல் ஆக்கப்பட்ட அரசியல் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன்...

நாமலின் ஏர்பஸ் இலஞ்ச வழக்கு! சாட்சியமளிக்க இலங்கை வரும் பிரான்ஸ் புலனாய்வாளர்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான ஏர்பஸ் இலஞ்சக் குற்றச்சாட்டு தொடர்பான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்