24.6 C
Jaffna
January 5, 2025
Pagetamil
மலையகம்

பதுளை – கொழும்பு சொகுசு புகையிரத சேவை ஆரம்பம்!

கொழும்பில் இருந்து பதுளைக்கு புதிய சொகுசு புகையிரதம் இந்த வார இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

மலையகத்தில் உள்ள பல சுற்றுலாத்தலங்களை உள்ளடக்கிய பாதையில் பயணிக்கும் புகையிரதத்தை ஆரம்பிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இலங்கை புகையிரத திணைக்களம் பூர்த்தி செய்துள்ளது.

‘எல்ல ஒடிஸி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புகையிரதம், கொழும்பு-கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து ஒவ்வொரு சனிக்கிழமையும் அதிகாலை 05.30 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 3.55 மணிக்கு பதுளை நிலையத்தை சென்றடையும்.

கம்பஹா, வெயாங்கொட, பொல்ஹெங்கொட, ரம்புக்கனை, பேராதனை, கண்டி, நாவலப்பிட்டி, நானுஓயா, ஹப்புத்தளை, தியத்தலாவ, பண்டாரவளை, எல்ல மற்றும் பதுளை ஆகிய புகையிரத நிலையங்களில் சொகுசு புகையிரதம் நிறுத்தப்படும்.

இந்த புகையிரதம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பதுளை புகையிரத நிலையத்தில் இருந்து காலை 09.50 மணிக்குப் புறப்பட்டு இரவு 07.20 மணிக்கு கொழும்பு புகையிரத நிலையத்தை சென்றடையும்.

இந்த புகையிரதம் பாதையில் இருக்கும் இயற்கை காட்சிகளில் நிறுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஹட்டனில் திடீர் சுற்றிவளைப்பு: 130 பேர் மீது வழக்கு பதிவு

east tamil

இரத்தினபுரியில் கடந்த வருடம் எலிக்காய்ச்சலால் 22 மரணங்கள்

Pagetamil

அமரர் பெ. சந்திரசேகரனின் 15வது நினைவு தின நிகழ்வு

east tamil

வாகன விபத்தில் இருவர் பலி

Pagetamil

அதிக சத்தத்தில் பாட்டு கேட்டதால் விபரீதம்: தந்தையும் சகோதரனும் தாக்கி மூத்த மகன் பலி!

Pagetamil

Leave a Comment