UPDATE: புத்தூர் கொலை சம்பவத்தில் தேடப்பட்டவரே தமிழகத்திற்கு தப்பிச் சென்றார்!

Date:

தமிழகத்தில் இன்று கைதான இரண்டு இளைஞர்களும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு கண்ணாடிஇழை படகுமூலம் சென்ற இரண்டு இளைஞர்கள், சுங்கத்துறை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில் பிரதாப், நாகேஸ் என தம்மை கூறியதுடன்,  மன்னார், அடம்பன் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் கூறியுள்ளனர்.

மன்னாரிலிருந்து அவர்கள் சட்டவிரோதமாக தப்பி சென்றிருந்தனர்.

அவர்களின் புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து, அவர்கள் பற்றிய பல தகவல் வெளியாகியுள்ளது.

அவர்கள் யாழ்ப்பாணம், புத்தூர் வீரவாணியை சேர்ந்த யோகநாதன் பிரதாபன், விஜயராசா நாகேஸ்வரன் என்பது தெரிய வந்துள்ளது.

வீரவாணி பகுதியில் தனிமையில் இருந்த முதியவர் ஒருவர் கடந்த மாதம் 28ஆம் திகதி வெட்டிக் கொல்லப்பட்டிருந்தார். அந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் யோகநாதன் பிரதாபன் தேடப்பட்டு வந்த நிலையிலேயே, அவர்கள் இன்று தமிழகத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்த போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த செய்தியையும் படியுங்கள்: புத்தூரில் அதிகாலையில் ஒருவர் வெட்டிக்கொலை!

spot_imgspot_img

More like this
Related

‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இருவர் கைது

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத்...

சட்டவிரோத மீன்பிடி மற்றும் மீன்பிடிப் படகுகள் ஊடாக முன்னெடுக்கப்படும் ஏனைய சட்டவிரோதச் செயல்களைக் கட்டுப்படுத்த 15 கடற்றொழில் மாவட்டங்களில் விசேட குழுக்கள்

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும், மீன்பிடிப் படகுகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் ஏனைய...

திலினி பிரியமாலியை கைது செய்ய உத்தரவு

கோடிக்கணக்கான ரூபாய் பண மோசடி குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் திலினி பிரியமாலியை கைது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்