கனடாவின் பிரட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் புதிய கட்டுப்பாடுகள்!

Date:

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்வதையடுத்து, அங்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன..

மாகாணத்தின் தலைமை பொது சுகாதார வைத்திய அதிகாரி விடுத்துள்ள அறிவிப்பில், புதிதாக விதிக்கப்படும் அனைத்து கட்டுப்பாடுகளும் எதிர்வருகின்ற மூன்று வாரங்களுக்கு அமுலுக்கு கொண்டு வர இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தனிமனித இடைவெளி, முக கவசம் அணிதல் மற்றும் சனிடைசர் உபயோகித்தல் போன்ற அடிப்படை விதிமுறைகளை மக்கள் அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

பாடசாலைகள் மாணவர்களுக்கான வகுப்புகளை மெய்நிகர் வகுப்புகளாக இயக்கப்பட்டு வருகின்றன.

மேலும் வைரஸ் தொற்று அதிகம் பரவும் இடமாக கருதப்படும் உணவகங்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் போன்றவற்றிற்கு மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இயங்குவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்று அறிவித்துள்ளார்.

இந்த கடுமையான நிபந்தனைகள் அனைத்தும் எதிர்வரும் மூன்று வாரங்களுக்கு கடைபிடிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் கனடாவில் விமர்சையாக நடத்தப்பட்டுவரும் பனிச்சறுக்கு விடுதிகளுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. வீசிலர் பிளாக் கோம்பு என்ற பனிச்சறுக்கு விடுதி ஏப்ரல் 19ஆம் திகதி வரையிலான தடைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டுமென்று மாகாணம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புகள் அனைத்தும் மாகாணத்தினால் முடிவு எடுக்கப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது

Share post:

spot_imgspot_img

More like this
Related

ரசிக வெறியால் வந்த வினை: தமிழக தேர்தலில் கள்ள வாக்கிட்ட இலங்கைத் தமிழர்கள் பலர் கைது!

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற்று முடிந்துள்​ளது. எப்​போதும் இல்​லாத வகை​யில் இந்​த​முறை...

யாழில் மின்னல் தாக்கி இளைஞன் பலி

யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் நேற்று (14) மின்னல் தாக்கி இளைஞர்...

உக்ரைனின் ட்ரோன்கள் அத்துமீறியதால் கவிழ்ந்த ஆட்சி: லாட்வியாவில் நடப்பது என்ன?

பால்டிக் நாடான லாட்வியாவிற்குள் அத்துமீறி நுழைந்த உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் தொடர்பான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்