இராஜப்பு ஜோசப் ஆண்டகைக்கு மட்டக்களப்பில் நாளை அஞ்சலி

Date:

தமிழ்தேசியத்தின்பால் ஓங்கி ஒலித்த குரல், ஓய்வுநிலை ஆயர் அமரர் வண இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களின் இறுதி நல்லடக்க நாளான நாளை திங்கள்கிழமை (05) பி.ப 4, மணிக்கு மட்டக்களப்பு நகரில் உள்ள தந்தைசெல்வா சிலை வளாகத்தில் அஞ்சலி நினைவு இடம்பெறவுள்ளது.

மட்டக்களப்புமாவட்ட தமிழ்தேசியகூட்டமைப்பின் ஏற்பாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுகட்சி சிரேஷ்ட தலைவருமான பொ.செல்வராசா அவர்களின் தலைமையில் இடம்பெறும் இந்த அஞ்சலி நிகழ்வில் மறைந்த மன்னார் முன்னாள் மறைமாவட்ட ஆயர் அருட்திரு இராஜப்பு ஜோசப் அவர்களின் படத்திற்கு மலர்மாலை அணிவித்து நினைவு சுடர்கள் ஏற்றி மௌனப் பிரார்தனை செய்வதுடன் அன்னாரின் நினைவு தொடர்பாக “நினைவுரையும்” இடம்பெறும்.

ஆன்மீக தலைவராக இருந்து தமிழ்தேசியத்தின்பால் அக்கறையுடன் செயலாற்றி வடக்கு கிழக்கு மக்கள் பல நெருக்கடிகளையும், கொலை அச்சுறுத்தல்களையும், தடைகளையும் சந்தித்த வேளைகளில் எல்லாம் தேசிய்ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் துணிந்து குரல் கொடுத்த உன்னத மகான் ஆண்டகை இராஜப்பு ஜோசப் அடிகளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் இடம்பெறும் இந்த அஞ்சலி வணக்க நிகழ்வானது கொரோணா நோய் பாதுகாப்பை கருத்தில்கொண்டு முக்கவசம், சுகாதாரநடைமுறைகளை பின்பற்றி விரும்பியவர்களை கலந்துகொள்ளுமாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

மீனவர்களின் வாழ்வியலை சிதைக்கிறார் அமைச்சர்” – நீதிமன்றம் செல்லத் தயாராகும் கடற்றொழில் இணையம்

மீனவர்களின் வாழ்வியலை சிதைக்கும் கடல் தொழில் அமைச்சருக்கு எதிராக நீதிமன்ற வழக்கினை...

கொழும்பில் திருட்டில் ஈடுபட்ட குற்றத்தில் தமிழகத்தை சேர்ந்த இருவர் யாழில் கைது

கொழும்பில் திருட்டில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த இருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் கொழும்பு...

அஞ்சல் திணைக்களத்தின் புதிய சேவைகளை அறிமுகப்படுத்தும் விசேட வியாபார மேம்படுத்தல் நிகழ்வு

அஞ்சல் திணைக்களத்தின் புதிய சேவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் விசேட வியாபார மேம்படுத்தல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்