Pagetamil
இலங்கை

இலங்கையில் வாழ முடியாமல் மேலும் 6 பேர் தமிழகம் சென்றனர்!

இலங்கையில் வாழ முடியாமல் இரு குடும்பங்களை சேர்ந்த 6 நபர்கள் படகு மூலம் இன்று புதன்கிழமை (27) அதிகாலை தனுஷ்கோடியை சென்றடைந்துள்ளனர்.

ஏற்கனவே 30 குடும்பங்களை சேர்ந்த 117 நபர்கள் அகதிகளாக மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று தனுஷ்கோடி அடுத்த கம்பிபாடு பகுதியில் ஒரு குடும்பம், தனி நபர் ஒருவரை சேர்த்து 3 சிறுவர்கள் உட்பட 6 பேர் தஞ்சம் அடைந்துள்ளனர்.

தஞ்சம் அடைந்தவர்களை கடலோர காவல் குழும போலீசார் விசாரணைக்காக மண்டபம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவர்கள் கிளிநொச்சி மற்றும் திருகோணமலை மாவட்டங்களை சேர்ந்தவர்கள்.

அகதிகளாக வந்தவர்கள் மரைன் போலீசாரின் விசாரணையின் பின்னர் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட உள்ளனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை (26) இரவு 07.00 மணிக்கு தலைமன்னாரில் இருந்து குறித்த இரு குடும்பத்தை சேர்ந்த 6 நபர்கள் இலங்கை படகு மூலம் தனுஷ்கோடிக்கு பயணத்தை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வடக்கு கிழக்கில் புராதன பௌத்த தளங்களை பாதுகாக்க விசேட திட்டங்கள் – புத்தசாசன அமைச்சர்

east tamil

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

Pagetamil

இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

Pagetamil

புதிய வடிவில் TELL IGP மற்றும் l-need சேவைகள்

Pagetamil

யாழில் மீளவும் சோதனைச் சாவடிகள்: பொது பாதுகாப்பின் மேல் புதிய கேள்விகள்

east tamil

Leave a Comment