விஷால் பட நாயகியின் இரகசிய காதல் பகிரங்கமானது!

Date:

நடிகை அனு இம்மானுவேலும், தெலுங்கு நடிகர் அல்லு சிரிசும் ரகசியமாக காதலித்து வரும் தகவல் வெளியாகியுள்ளது.

அனு இம்மானுவேல் தமிழில் விஷாலுடன் துப்பறிவாளன், சிவகார்த்திகேயனுடன் நம்ம வீட்டு பிள்ளை படங்களில் நடித்துள்ளார். சர்வானந்த், சித்தார்த் நடிப்பில் தமிழ், தெலுங்கில் தயாராகும் மகாசமுத்திரம் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

அல்லு சிரிஷ் தெலுங்கில் இளம் கதாநாயகனாக வளர்ந்து வருகிறார். தமிழ், தெலுங்கில் வெளியான கவுரவம் படத்திலும் நடித்து இருக்கிறர். இவர் நடிகர் சிரஞ்சீவியின் மைத்துனர் மகன் என்பதும் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் அனு இம்மானுவேல் பிறந்த நாள் கொண்டாடினார். அப்போது அனுவை வாழ்த்தி அல்லு சிரிஷ் ஒரு வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவில் இருவரும் நெருக்கமாக உள்ளனர். அனுவை சைக்கோ என்றும் செல்லமாக அழைத்து உள்ளார். இந்த வீடியோ அவர்கள் காதலை உறுதிப்படுத்தி இருப்பதாக தெலுங்கு பட உலகினர் பேசுகிறார்கள்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையில் 10 சதவீதப் பிறப்புகள் குறைமாதப் பிறப்புகள் – நீண்டகால மருத்துவக் கண்காணிப்பு அவசியம்!

இலங்கையில் இடம்பெறும் மொத்தப் பிறப்புகளில் சுமார் 10 சதவீதமானவை குறைமாதப் பிறப்புகளாக...

‘உயிருடன் திரும்புவது சாத்தியமற்றது’: பாகிஸ்தான் சிறைக்கொடுமைகளை அம்பலப்படுத்திய இம்ரான் கானின் கடிதம்!

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் பிடிஐ (PTI) கட்சியின் நிறுவனரும், முன்னாள் பிரதமருமான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்