அவிசாவளையில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவிசாவளை, மாடொல பிரதேசத்தில் அமைந்துள்ள பழைய இரும்பு சேகரிக்கும் நிலையம் ஒன்றில் நபரொருவர் எரிவாயு சிலிண்டர் ஒன்றை வெட்ட முற்பட்ட போது இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.



