27.3 C
Jaffna
February 1, 2025
Pagetamil
இலங்கை

இன்று 25% தனியார் பேருந்துகள் இயங்கும்

இன்று 25 சதவீத பேருந்துகள் இயக்கப்படும் என தனியார் பேருந்து நடத்துநர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்துச் சபையின் சில டிப்போக்களில் இருந்து குறைந்த அளவிலான எரிபொருளை பெற்றதாக, இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

பேருந்துகளை விரைவில் இயல்பு நிலைக்கு கொண்டு வர பேருந்து உரிமையாளர்கள் முயற்சி எடுப்பார்கள் என்று உறுதியளித்தார்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கீழ், தனியார் பஸ்களுக்கு எரிபொருள் வழங்கும் வேலைத்திட்டம் உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டுமென விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வாரங்களில் போக்குவரத்துக்கான எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கும், நடவடிக்கைகளை 50 வீதத்தால் அதிகரிப்பதற்கும் புதிய அரசாங்கம் தனியார் பேருந்து நடத்துனர்களுக்கு உதவும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விரைவில் மீண்டும் சிக்கன்குனியா

east tamil

கிளிநொச்சியில் மேற்கொள்ளப்படுகின்ற நீர் துண்டிப்பால் பொது மக்கள் பாதிப்பு

Pagetamil

வைரஸ் தாக்கம் காரணமாக அனைத்து பன்றிகளையும் இழந்த கிளிநொச்சி பண்ணையாளர்

Pagetamil

மாவையின் உடலுக்கு சுமந்திரன் அஞ்சலி

Pagetamil

சிகரம் கல்வி நிறுவனத்தின் வருடாந்த கௌரவிப்பு நிகழ்வு

east tamil

Leave a Comment