வைரஸ் தாக்கம் காரணமாக அனைத்து பன்றிகளையும் இழந்த கிளிநொச்சி பண்ணையாளர்

Date:

கிளிநொச்சி செல்வாநகர் கிராமத்தில் பன்றி பண்ணையில் இருந்த அனைத்து
பன்றிகளும் வைரஸ் தாக்கம் இறந்து விட்டதாக பண்ணை உரிமையாளர் கவலை
தெரிவித்துள்ளார்.

பல இலட்சங்கள் முதலீடு செய்து பன்றி பண்ணையை நடாத்தி வந்த நிலையில்
தற்போது நாடாளவிய ரீதியில் பரவி வைரஸ் நோய்த்தாக்கம் காரணமாக தங்கள்
பண்ணையில் உள்ள அனைத்து பன்றிகளும் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ள அவர்
இதன் மூலம் 75 இலட்சத்திற்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும்
தெரிவித்துள்ளார்.

தன்னுடைய பண்ணையில் உள்ள 150 வரையான பெரிய பன்றிகளும், 100 இற்கு
மேற்பட்ட பன்றி குட்டிகளும் இறந்துவிட்டதாக தெரிவித்துளள அவர். இந்த
வைரஸ்த்தாக்கம் ஏற்பட்டவுடன் பன்றி ஒரு நாள் உணவு உட்கொள்ளாது இருக்கும்
என்றும் மறு நடுக்க தொடங்கும் இதனை தொடர்ந்து அவை இறந்துவிடும். ஆதாவது
நோய்த்தாக்கம் ஏற்பட்டு இரண்டு நாட்களுக்குள் பன்றிகள் இறந்து விடுகின்ற
எனத் தெரிவித்தார்.

சுற்றுச் சூழல் முதல் சுகாதார துறை எனத் அனைத்து மட்டங்களிலும் அனுமதி
பெற்று பெருமளவு நிதியினை முதலீடு செய்து ஆரம்பித்த தொழில் வெற்றிகரமாக
சென்றுக்கொண்டிருந்த நிலையில தற்போது இந்த வைரஸ் தாக்கம் எனது பண்ணையை
முற்று முழுதாக அழித்துவிட்டது. மீளவும் இந்த தொழில் துறையை என்னால்
ஆரம்பிக்க முடியுமா என்ற நிலைமையே தற்போது காணப்படுகிறது.

அரசோ அல்லது உரிய திணைக்களங்களோ இதற்கான நட்டஈட்டை ஓரளவு தந்துதவினால்
என்னால் மீண்டும் பன்றி வளர்ப்பு தொழிலை ஆரம்பிக்க முடியும் எனவும் பண்ணை
உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

வவுனியா மாநகர முதல்வரை பதவிநீக்கும் ஆளுனரின் வர்த்தமானிக்கு இடைக்கால தடை

வவுனியா மாநகரசபை முதல்வர் சு.காண்டீபனை அந்த பதவியிலிருந்தும், உள்ளூராட்சி உறுப்பினர் பதவியிலிருந்தும்...

ஈரான் உயர்மட்ட பேச்சுவார்த்தையாளர்களை கொல்ல இஸ்ரேல் சதித்திட்டம்: அமெரிக்கா எச்சரிக்கை!

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வாஷிங்டன் தெஹ்ரானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தபோது, ​​ஈரானின் உயர்மட்டப்...

சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ வழக்கு பிற்பகல் வரை ஒத்திவைப்பு

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் புதல்வரான சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்