நாடு முழுவதும் அவசரகால சட்டம் அமுல்!

Date:

இலங்கை முழுவதும் அவசரகால சட்டத்தை  அமுல்ப்படுத்தியுள்ளார் பதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 2வது பிரிவின் கீழ்  பொது அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில், பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 40) இரண்டாம் பாகத்தின் ஏற்பாடுகள் இன்று முதல் இலங்கை முழுவதும் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது பாதுகாப்பு, பொது ஒழுங்கைப் பாதுகாத்தல் மற்றும் சமூகத்தின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பொருட்கள் மற்றும் சேவைகளைப் பேணுதல் ஆகியவற்றின் நலன்களுக்காக இலங்கையில் பொது அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

1959 ஆம் ஆண்டின் சட்டம் எண். 8, 1978 ஆம் ஆண்டின் சட்டம் எண். 6 மற்றும் 1988 ஆம் ஆண்டின் சட்டம் எண். 28 ஆகியவற்றால் திருத்தப்பட்ட பொதுப் பாதுகாப்பு ஆணையின் (அத்தியாயம் 40) பிரிவு 2 இன் படி அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில், பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

ஷிராந்திக்கு பிணை!

‘சிரிலிய சவிய’ கணக்கு தொடர்பான விசாரணைகளுக்கு அமைய இலஞ்ச ஊழல் விசாரணை...

மட்டக்களப்பில் மனைவியின் சகோதரியை 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அத்தானுக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மனைவியின் சகோதரியான 16 வயது சிறுமி...

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டிலிருந்த 11.23 ஏக்கர் காணிகள் உத்தியோகபூர்வமாக விடுவிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டிலிருந்த மொத்தம் 11.23 ஏக்கர் காணிகளை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்