சுகாதார ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருள் வழங்கும் வேலைத்திட்டம் இன்று (15) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
வெள்ளிக்கிழமைகளில் சுகாதாரப் பணியாளர்களுக்கு எரிபொருளைப் பெற்றுக்கொள்ளும் முறை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் நாடளாவிய ரீதியில் தொடரும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி சுகாதார பணியாளர்கள் தெரிவு செய்யப்பட்ட 109 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும்.
வாகனங்களுக்கு 20 லீற்றர் எரிபொருளும், முச்சக்கர வண்டிகளுக்கு 8 லீற்றரும், மோட்டார் சைக்கிள்களுக்கு ஆறு லீற்றரும் வழங்கப்படும்.




