கோட்டாவிற்கு அடைக்கலம் வழங்கவில்லை; தனிப்பட்ட பயணமாகவே வந்தார்: சிங்கப்பூர் விளக்கம்!

Date:

இலங்கையிலிருந்து தப்பிச் சென்ற ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தனிப்பட்ட முறையிலேயே சிங்கப்பூருக்கு வந்துள்ளதாகச் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர் சமூக வருகை அனுமதியின்கீழ் அங்கு வந்துள்ளார். அவருக்கு அடைக்கலம் அளிக்கப்படவில்லை, அவர் அடைக்கலம் நாடவும் இல்லை என்று தெரிவித்துள்ளது.

கோட்டாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்க விமான நிலையத்தில் காத்திருந்த இலங்கையர்கள்

மேலும் சிங்கப்பூர் பொதுவாக அடைக்கலம் வழங்குவதில்லை என்றும் குறிப்பிட்டது.

பொதுமக்கள், சிங்கப்பூரர்கள், குடியிருப்பாளர்கள், வேலை அனுமதியில் இருப்போர், சுற்றுப் பயணிகள் ஆகியோர் உள்ளூர்ச் சட்டங்களை மதித்து நடக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டது.

சட்டவிரோதமாகப் பொதுக் கூட்டங்களில் பங்கேற்போர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அது தெரிவித்தது.

இதேவேளை, சவுதி எயார் லைன்ஸ் SV788  இலக்க விமானத்தில் கோட்டாபய பயணித்தார். விமானம் இன்று இரவு  7.17 மணியளவில் சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்கியது.

பொலிஸ் வாகனங்களின் பாதுகாப்புடன், 3 சொகுசு வாகனங்களை கொண்ட வாகன அணியில் கோட்டா விமான நிலையத்தை விட்டு வெளியேறினார்.

spot_imgspot_img

More like this
Related

கறுப்பு ஜீலை இனப்படுகொலையில் பலியான தமிழ் மக்களுக்குப் பொது நினைவுச்சின்னம் அமைக்கப்பட வேண்டும்

கறுப்பு ஜீலை இனப்படுகொலையில் பலியான தமிழ் மக்களுக்குப் பொது நினைவுச்சின்னம் அமைக்கப்பட...

மட்டக்களப்பில் பாதுகாப்பு படையினரின் பெயரை போலியாக பயன்படுத்தி கடைகளில் நூதனமாக பண மோசடி ஈடுபட்ட நபரை கைது செய்ய நடவடிக்கை

மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பிரதேசங்களில் உள்ள யூஸ் விற்பனை நிலையங்கள் மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்