காட்டு யானையுடன் மோதி விபத்து: மூத்த நடிகர் ஜாக்சன் அந்தோனி தீவிர சிகிச்சைப் பிரிவில்!

Date:

காட்டு யானையுடன் கார் மோதி விபத்திற்குள்ளானதில் படுகாயமடைந்த பழம்பெரும் நடிகர் ஜாக்சன் அந்தோனி கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அவர் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார், ஆனால் சுயநினைவுடன் இருக்கிறார் என்று மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.

காயமடைந்த மற்றைய இருவரும் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார், மற்றையவர் சாதாரண வார்டில் அனுமதிக்கப்பட்டு காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

நேற்று இரவு 10 மணியளவில் அனுராதபுரம் – தலாவ வீதியில் பயணித்த வாகனம் மொரகொட பிரதேசத்தில் காட்டு யானையுடன் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த மூவரும் நேற்று மாலை அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தின் தாக்கத்தில் வாகனத்தின் மீது காட்டு யானை விழுந்து வாகனத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

அப்பகுதி மக்களும் தலாவ பொலிஸாரும் காயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

spot_imgspot_img

More like this
Related

ஷானி அபேசேகர, ரவி செனவிரத்னவுக்கு எதிரான கோட்டா கால நடவடிக்கை அரசியல் ரீதியானது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளான ரவி...

பிள்ளையான் உட்பட 3 பேருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால்...

தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்

இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்