இலங்கையிலிருந்து அகதியாக சென்ற மூதாட்டி தமிழகத்தில் உயிரிழப்பு!

Date:

தமிழகததிற்கு அகதியாக சென்ற மன்னாரை சேர்ந்த மூதாட்டி உயிரிழந்துள்ளர்.

இலங்கையிலிருந்து படகு மூலம் கடந்த மாதம் 27 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை தனுஷ்கோடி சென்ற வயதான தம்பதியர் கடற்கரையில் மயங்கிக் கிடந்த நிலையில் மீட்கப்பட்டு ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

சிகிச்சை பெற்று வந்த பரமேஸ்வரி என்ற மூதாட்டி சிகிச்சை பலனின்றி நேற்று (2) சனிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார் முருங்கன் பிட்டி பகுதியை சேர்ந்த பரமேஸ்வரி மற்றும் சிவன் ஆகிய வயோதிப தம்பதிகள் இருவரும் கடந்த மாதம் 27 ஆம் திகதி இலங்கையிலிருந்து படகு மூலம் தனுஷ்கோடிக்கு சென்றனர்.

இருவரும் மயக்க நிலையில் கடற்கரையில் மீட்கப்பட்ட நிலையில் ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவ சிகிச்சையில் உள்ள இருவரை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜான் டாம் வர்கீஸ் நேரில் சென்று பார்வையிட்டதோடு : அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

மேலும் இருவரின் உடல்நிலை மிக மோசமாக இருப்பதால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து அனுப்பி வைத்தார்.

இந்த நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த வயோதிப தம்பதிகளில் பரமேஸ்வரி என்ற மூதாட்டி சிகிச்சை பலனின்றி நேற்று (2) சனிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

spot_imgspot_img

More like this
Related

ஷானி அபேசேகர, ரவி செனவிரத்னவுக்கு எதிரான கோட்டா கால நடவடிக்கை அரசியல் ரீதியானது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளான ரவி...

பிள்ளையான் உட்பட 3 பேருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால்...

தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்

இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்