தற்போதைய அரசில் பிரதமர் பதவியை ஏற்க தயாரில்லை: மைத்திரி!

Date:

தற்போதைய நிர்வாகத்தின் கீழ் பிரதமர் பதவியை ஏற்க எதிர்பார்க்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரபால, தற்போதைய நிர்வாகத்தின் கீழ் எந்த அரசாங்க பதவியையும் ஏற்கப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.

மகாசங்கத்தின் வழிகாட்டுதலின்படி கூடிய விரைவில் சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படாவிட்டால், இலங்கை கலவரங்கள் மற்றும் போராட்டங்களின் மையமாக இருக்கும் என்றும் எச்சித்தார்.

பொருளாதார மந்தநிலையில் இருந்து இலங்கையை மீட்பதற்கு தற்போதைய அரசாங்கத்திற்கு திறமையும் அறிவும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி  தெரிவித்தார்.

எனவே அனைத்து அரசாங்க அமைச்சர்களையும் பதவி விலகுமாறு மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.

உடனடியாக சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என முன்னாள் அரச தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.

பாடசாலைகள் மற்றும் அரச அலுவலகங்கள் மூடுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து சேவைகள் இன்மை போன்ற பல பிரச்சினைகளுக்கு மத்தியில் மக்கள் அவதிப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி சிறிசேன தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் உடனடியாக இராஜினாமா செய்து அனைத்துக் கட்சி ஆட்சி அமைக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அரசியலமைப்பின் 22வது திருத்தம் ஜனநாயகமானது அல்ல எனவும் முன்னாள் ஜனாதிபதி சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே புதிய சீர்திருத்தத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் போராட்டங்களை நடத்துவதற்கு தமது கட்சி தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் தெரிவித்தார்.

உத்தேச 22வது திருத்தச் சட்டத்தின் ஊடாக ஜனாதிபதி தொடர்ந்தும் அதிகாரத்தைக் கைப்பற்றினால் வெளிநாட்டு உதவிகள் வருவது நிறுத்தப்படும் என முன்னாள் ஜனாதிபதி சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தை விரைவில் நீதிமன்றில் முன்வைக்கும் என கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

ஷானி அபேசேகர, ரவி செனவிரத்னவுக்கு எதிரான கோட்டா கால நடவடிக்கை அரசியல் ரீதியானது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளான ரவி...

பிள்ளையான் உட்பட 3 பேருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால்...

தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்

இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்