இலங்கை- அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (29) ஆரம்பமாகவிருக்கிறது.
இந்நிலையில் அந்த மைதானத்தை சுற்றி, லிட்ரோ, லாஃப் சமையல் எரிவாயு வெற்று சிலிண்டர்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்த சிலிண்டர்கள் யாவும் 25 நாட்களுக்கும் மேலாக அங்கு வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேற்று லாஃப் நிறுவனம் மக்களிற்கு எரிவாயு விநியோகித்தது. எனினும், காத்திருந்த அனைவருக்கும் எரிவாயு கிடைக்கவில்லை.
இதனால், இன்று மஞ்சள்,நீல நிற சிலிண்டர்கள் சுற்றவர அடுக்கப்பட்டுள்ள காலி மைதானத்தில் இரண்டு அணிகளும் முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளன.




