மன்னாரில் ‘எங்கெங்க காணினும்’ வரிசை: வீதியை மறித்து மக்கள் போராட்டம்!

Date:

மன்னார் மாவட்டம் முழுவதும் இன்று வெள்ளிக்கிழமை(24) மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் எரிவாயு விற்பனை முகவர் நிலையங்களுக்கு முன் நீண்ட வரிசையில் எரிபொருள் மற்றும் எரிவாயு களை பெற்று கொள்வதற்கு வரிசையில் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் மன்னார் முகவர் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற ஒரு தொகுதி லாப் எரிவாயுக்கள் மக்களுக்கு வழங்காமல் உரிமையாளர் பதுக்கி வைத்துள்ளதாக மக்கள் குறித்த விற்பனை முகவர் நிலையத்திற்கு முன்பாக வீதிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஸ்ரான்லி டிமேல் மற்றும் பிரதேச செயலாளர் ம.பிரதீப் தலையீட்டின் காரணமாக சொந்த பாவனைக்கு என்ற பெயரில் வழங்கப்படாமல் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 21 எரிவாயு சிலிண்டர்கள் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

அதே நேரம் மன்னாரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிவாயு இன்மையால் எரிவாயு வழங்கும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ள போதிலும் மக்கள் நீண்ட வரிசையில் மண்ணெண்ணெய் மற்றும் பெட்ரோல் பெறுவதற்கு காத்திருப்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

அத்துடன் பல பகுதிகளில் எரிவாயு விநியோகம் மற்றும் எரிபொருள் விநியோகம் திட்டமிட்ட முறையில் நடை முறைப்படுத்தப்படாமையினால் எரிவாயு மற்றும் எரிபொருள் பதுக்கல் மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் செயற்பாடுகளும் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

பண்டிகைக்காலத்தில் கோழி இறைச்சி விலை அதிகரிக்காது!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி விலை பாரியளவில் அதிகரிக்காது என...

மீண்டும் பொருளாதார நெருக்கடியா? திட்டமிட்ட சதி குறித்து ஜனாதிபதி எச்சரிக்கை!

2028ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் அரச துறை ஊழியர்களின்...

இரத்தினபுரி – ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

இவ்விபத்தில் காயமடைந்தவர்களில் ஐவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விபத்து இடம்பெற்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்