காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் இன்று காலை ஜனாதிபதி செயலகத்தின் எஞ்சிய இரண்டு நுழைவாயில்களையும் அடைத்துள்ளனர்.
நுழைவாயிலை தடுத்து மேலும் இரண்டு கூடாரங்களை அமைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 72 நாட்களாக காலி முகத்திடலில் பல்வேறு அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தி போராட்டங்கள் நடந்து வருகின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.




