25.6 C
Jaffna
January 10, 2025
Pagetamil
இலங்கை

கருத்தடை புரளி: வைத்தியர் ஷாபியின் நிலுவை கொடுப்பனவுகளை வழங்க சுகாதார அமைச்சு ஒப்புதல்!

குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மருத்துவ பிரிவுக்கு சிகிச்சைக்கு வந்த பெருமளவிலான பெண்கள் அவர்களுக்கு தெரியாமல் கருத்தடை செய்யப்பட்டதாக  கூறப்பட்ட போலிக் குற்றச்சாட்டின் பேரில் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட விசேட வைத்திய நிபுணர் டொக்டர் ஷாபி ஷிஹாப்தீன் பணிக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளார்.

அவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட காலப்பகுதியில் வழங்கப்படாத ஏனைய கொடுப்பனவுகள் அனைத்தும் ஜூலை 10 ஆம் திகதிக்கு முன்னர் செலுத்துவதற்கு சுகாதார அமைச்சு நேற்று (8) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது.

நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்னிலையில் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

சேவையிலிருந்து கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட காலத்திற்கான நிலுவைத் தொகைகள், கொடுப்பனவுகள், இடைக்கால கொடுப்பனவுகள் மற்றும் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவுகள் ஆகிய சகல நிலுவைகளையும் மனுதாரர் டொக்டர் ஷாபி ஷிஹாப்தீனுக்கு செலுத்த முடியும் என சட்டமா அதிபர் சட்டமா அதிபரும் முன்னர் நீதிமன்றத்தில் அறிவித்திருந்தார்.

இதேவேளை, குருநாகல் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் சந்தன கண்டங்கமுவ நியமித்த ஒழுக்காற்று விசாரணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகத் தயார் என மனுதாரர் வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் மேன்முறையீட்டு நீதிமன்றில் அறிவித்தார்.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு, டொக்டர் சஹாப்தீன் தனது மனுவை வாபஸ் பெறுமாறு விடுத்த கோரிக்கையை ஏற்று, மனு மீதான விசாரணையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு முடிவு செய்தது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

குகதாசன் கண்டனம்

east tamil

‘எலிக்காய்ச்சல் வந்து சாவாய்’: யாழில் நிதி கொடுக்க மறுத்தவர்களை சபித்த மதபோதகர்!

Pagetamil

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் பன்னிருவரும் நிபந்தனையுடன் விடுதலை

east tamil

சுண்ணாம்புக்கல் அகழ்வில் சட்டவிரோத செயற்பாடுகள் யாவும் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்: பொ. ஐங்கரநேசன் கோரிக்கை

Pagetamil

பிரபல தவில் வித்துவான் மகன் உயிரிழப்பு

east tamil

Leave a Comment