முல்லைத்தீவு மாவட்டத்துக்கு உட்பட்ட விசுவமடு பகுதியில் அமைந்துள்ள விசுவமடு விஸ்வநாதன் ஆரம்ப பாடசாலையில் மாணவர்கள் இன்று காலை போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
தமது பாடசாலையில் ஒரு வருட காலமாக பாடசாலை அதிபர் இல்லாமையால் கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலை உள்ளதாக தெரிவித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த வருடம் 376 மாணவர்கள் பாடசாலையில் கற்றுவந்த நிலையில் இந்தவருடம் 299 மாணவர்களாகஅது குறைவடைந்துள்ளதாக தெரிவித்ததுடன், அதிபர் இல்லாத காரணத்தினால் பல மாணவர்கள் வேறு படசாலைகளுக்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
புதுக்குடியிருப்பு கோட்டத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்று வந்த பாடசாலை என பலராலும் போற்றப்பட்ட பாடசாலைக்கு அதிபர் நியமிக்கப்படாமை தொடர்பில் கவலையிட்டுள்ளனர்.
தமது பாடசாலைக்கு அதிபர் ஒருவரை நியமித்து தருமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.