எதிர்ப்பை பொருட்படுத்தாமல் 31 ஈழத்தமிழர்களை நாடு கடத்தியது ஜேர்மனி!

Date:

ஜேர்மனியில் அரசியல் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 31 ஈழத்தமிழர்கள் நேற்று (30) செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.

நாடு கடத்தல் முடிவை கைவிட வலியுறுத்தி டுசில்டோர்ப் விமானநிலையத்திற்குள் ஈழத்தமிழ் மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.எனினும், ஜேர்மனி தனது முடிவை மாற்றவில்லை.

இந்த நாடு கடத்தல் முடிவை எதிர்த்து யேர்மனி ஈழத்தமிழர் மக்களவை, யேர்மனி இளையோர் அமைப்பு மற்றும் பெண்கள் அமைப்பு ஆகியன யேர்மனிய மனிதநேய அமைப்புக்களுடனும் கட்சிகளுடனும் இணைந்து தொடர் ஆர்ப்பாட்டங்களை யேர்மனி முழுவதும் முன்னெடுத்து வந்தனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்து வைக்கப்பட்டிருந்தவர்களை டுசில்டோர்ப் விமானநிலையத்திலிருந்து நாடுகடத்துவதற்கான ஆயத்தங்கள் நடந்தபோது விமானநிலையத்தில் தமிழ்மக்களையும், யேர்மனி மனிதஉரிமை அமைப்புக்களையும், கட்சிகளையும் அணிதிரட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம் நடந்துகொண்டிருந்தபோது நான்கு பேரை விடுதலை செய்துள்ளதாகத் தகவல் கிடைத்தது. இருந்தபோதும் 31 ஈழத்தமிழர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

ஃப்ளைதுபாய் துணை விமானி கோடரி மூலம் பயங்கரவாத தாக்குதல்

Flydubai விமானம் FZ1073-இன் துணை விமானி, விமானப் பயணத்தின்போது ஒரு "பயங்கரவாத"...

1 Kg கோழி இறைச்சி இலஞ்சமாக கேட்ட பொலிஸ்காரர் பணி இடைநீக்கம்!

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவருக்குப் பொலிஸ் பிணை வழங்குவதற்காக ஒரு கிலோகிராம்...

வெளிநாட்டு பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய முச்சக்கர வண்டி சாரதிக்கு 10 வருட சிறை!

வேலைவாய்ப்பு தருவதாகக் கூறி இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்