அரச ஊழியர்களிற்கு ரூ.20,000 சம்பள அதிகரிப்பா?: வதந்திகளை நம்பாதீர்கள்!

Date:

பொதுத்துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவ்வாறான தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என அந்த அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

வரவிருக்கும் இடைக்கால பட்ஜெட்டில் சுகாதாரம் மற்றும் கல்வித்துறை தவிர அனைத்து அமைச்சகங்களுக்கும் ஒதுக்கீடுகள் குறைக்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் தெளிவுபடுத்தியுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்படவுள்ள நிவாரணம் சார்ந்த வரவு செலவுத்திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களின் சம்பளம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படும் என பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டதை அடுத்து இந்த தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வெருகல் ஆற்றில் மாயமான சகோதரர்களின் சடலங்கள் மீட்பு!

மகாவலி ஆற்றின் வெருகல் ஆறு பாலத்திற்கு அருகில் நீராடச் சென்ற தந்தை...

ஈரான் மீது கிடுக்குப்பிடி; இஸ்ரேலுக்கு தாராளம்: அணுஆயுத விவகாரத்தில் ஏன் இரட்டை அணுகுமுறை?

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, ஈரானின் அணுசக்தித் திட்டம் கடுமையான சர்வதேசக் கண்காணிப்பு,...

வடகொரிய அணு ஆயுத உற்பத்தியில் தீவிர அதிகரிப்பு!

வட கொரியா தனது அணு ஆயுத உற்பத்தித் திறனில் 'மிகவும் தீவிரமான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்