இலங்கை சிவசேனை அமையத்தின் ஏற்பாட்டில் இந்துவாக வாழ்வோம் இந்து சமயம் காப்போம் என்னும் கருப்பொருளில் 02வது சங்கிலிமன்னனின் 403 வது சிராத்த தின நினைவேந்தல் அஞ்சலிகள் இன்று யாழ் நல்லூர் சங்கலியின் கோட்டையின் முன்பாக உள்ள நினைவு தூவியில் இடம்பெற்றன.
இவ் நினைவேந்தல் அஞ்சலியினை செலுத்துவதற்காக முதன்மை விருந்தினராக யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் சங்கிலியன் மன்னனின் உருவச்சிலைக்கான மலர்மாலை செலுத்தி நினைவேந்தல் செலுத்தினார்.
இதனை தொடர்ந்து யாழ் பல்கலைக்கழக தொல்லியல் மற்றும் மரபுஉரிமைகள் பீட பீடாதிபதி கலாநிதி புஸ்பரட்ணம் , யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் வாழ்நாள் பேராசிரியரும் ஆகிய கலாநிதி பாலசுந்தரம் பிள்ளை, யாழ் மாநகர பிரதிமுதல்வர் துறைராஜா ஈசன் மற்றும் யாழ் மாநகர சபையின்ஆணையாளர் த.ஜெயசீலன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு தமது சங்கிலியன் மன்னனின் சிலைக்கு நினைவேந்தல் செலுத்தி மலர் அஞ்சலி செலுத்தினர்கள்
இதனை தொடர்ந்து சங்கிலியமன்னன் தூவிக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட ஊர்வலப்பவனியும் இடம்பெற்றன. இது செம்மணிவீதியுடாக சென்று சங்கிலியன் வீதி பின்வீதியுடாக சென்று ஜமுனா எரியினை சென்றடைந்து அங்கு வரலாற்றுச்சின்னமாக ஜமுனா எரியில் 403 வது ஆண்டுக்கான சிராத்த நினைவேந்தல் இடம்பெற்றது. அங்கு எரியில் ஆத்மா சாந்தி அடையவேண்டி பிராத்தித்துக்கொண்டனர்.
இதன்போது, தமிழ்தேசிய சைவ மன்னன் என சங்கிலியனை விளித்து பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.