நாட்டின் நலனுக்காக ஐக்கிய மக்கள் சக்தி, பதவிகளைப் பொறுப்பேற்காமல் பாராளுமன்றச் செயற்பாட்டின் ஊடாக பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் மேற்கொள்ளும் தீர்மானங்களிற்கு முழு ஆதரவை வழங்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று (16) ஏகமனதாக தீர்மானித்துள்ளது.
தற்போதைய நெருக்கடியில் இருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கு பொறுப்பான அரசியல் கருதுவதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் அடிப்படைக் கொள்கைக்குப் புறம்பாக, கட்சி உறுப்பினர்களை அரச தரப்பில் இணைத்துக்கொண்டால், ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களின் ஆதரவை இடைநிறுத்தவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளது. .
கொழும்பு மார்க்ஸ் பெர்னாண்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்ற குழுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.




