முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்தி மன்னாரை வந்தடைந்தது

Date:

தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்தி பவணி இன்றைய தினம் திங்கட்கிழமை (16) மன்னாரை வந்தடைந்தது.

கடந்த 12 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பமானது. இதன் போது வடக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் குறித்த நினைவேந்தல் ஊர்தி சென்று முள்ளிவாய்க்கால் வாரம் அனுஸ்ரிக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் முள்ளிவாய்க்கால் வாரத்தின் 5வது நாளான இன்று திங்கட்கிழமை(16) குறித்த ஊர்தி மன்னாரை வந்தடைந்தது.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் அஞ்சலி இடம் பெற்றது. தமிழினப் படுகொலைக்கு நீதி கோரி இடம் பெற்ற ஊர்திப்பவனியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதி நிதிகள் மற்றும் மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த மக்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து கலந்து கொண்டவர்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

தீபாவளியன்று விபத்தில் சிக்கிய மனோ கணேசன்: மதுபோதையில் வாகனம் செலுத்தியதாக வழக்கு!

நவம்பர் 8 ஆம் திகதி தீபாவளித் திருநாளின் இரவு, நாடாளுமன்ற உறுப்பினரும்...

ஹிருணிகாவின் மேல்முறையீடு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு!

2015-ஆம் ஆண்டு இடம்பெற்ற கடத்தல் சம்பவம் தொடர்பான வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற...

இலங்கை வந்த நடிகை பூஜா ஹெக்டே

இந்தியத் திரைப்பட நடிகை பூஜா ஹெக்டே, இலங்கைக்கான குறுகிய காலப் பயணம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்